| |
|
|
|
ஸ்பெஷல் ரிப்போர்ட்
|
|
|
எல்லோருடனும் நடிக்கணும் ; புதுமுக நடிகையின் ஆசை
|
|
|
|
பிடிச்ச நடிகர், பிடிக்காத நடிகர், முன்னணி நடிகர், பின்னணி நடிகர்னு பிரிச்சு பார்க்காம எல்லோருடனும் நடிச்சு நல்ல பெயர் எடுக்கணும் என்று விவரமாக பேசுகிறார் புதுமுக நடிகை சாந்தினி. சர்ச் பார்க் கான்வெண்டில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, விஸ்காம் படிக்க எத்திராஜ் காலேஜூக்குள் புகுந்திருக்கும் இந்த அழகு ராட்சஸி இப்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 2007ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் மிடுக்கான தோற்றத்துடன் துடிப்பாக கலந்து கொண்டு மிஸ் போட்டோஜெனிக் பேஸ் பட்டத்துடன் திரும்பிய சாந்தினியை டி.வி.,யில் பார்த்த டைரக்டர் கம் நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று பேசி, தனது மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக்கி விட்டார். சாந்தனு - சாந்தனி ஜோடி (என்னவொரு பெயர் ஒற்றுமை பார்த்தீங்களா...?) நடித்திருக்கும் சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் படம் இறுதி கட்டத்தையும் எட்டி, ஆடியோவும் ரீலிஸ் ஆகி விட்டது. ஆடியோ ரீலிஸ் விழாவுக்கு ஒரு நடிகை போல் அல்லாமல் கல்லூரி மாணவிபோல எந்தவித பதட்டமும், பந்தாவும் இல்லாமல் வந்த சாந்தினியிடனம் பேச்சு கொடுத்தால் இனிக்க இனிக்க பேசுகிறார்.
எனது அப்பா பிஸினஸ் மேன். அம்மா ஹவுஸ் ஒய்ப். ஒரே ஒரு தம்பி. பிளஸ் 1 படிக்கிறான். எங்க குடும்பத்துக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை. நானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டதும் இல்லை. யாரிடமும் போய் வாய்ப்பு கேட்கவும் இல்லை. பிளஸ்2 படிக்கிறப்ப மிஸ் சென்னை போட்டி பற்றி கேள்விப்பட்டு அதுல கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி.,யில் பார்த்த பாக்யராஜ் சார், என்னை சினிமாவில் நடிக்க கூப்பிட்டார். சித்து படத்தில் சான்ஸ் கொடுத்தார். சினிமா பேக்ரவுண்ட் எதுவுமே இல்லாமல் ஈஸியா சினிமாவுக்குள்ள நுழைஞ்சாலும் கேமராவுக்கு முன்னால் நின்று நடிக்கவே பயமாக இருந்தது. அதிலும் டான்ஸ் ஆடவே தெரியல. சாந்தனு நல்ல பிரண்ட் போல இருந்து சொல்லிக் கொடுத்தார். பாக்யராஜ் சாரும் நிறைய கற்றுக் கொடுத்தார். சித்து படத்தில் நடித்தது ஒரு க்ளாஸ் போயிட்டு வந்தது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது, என்று சொல்லும் சாந்தினி தற்போது ஆர்யா தயாரிப்பில் சுஹா இயக்கும் படித்துறை படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எல்லோருடனும் நடிக்கணும். நல்ல பெயர் எடுக்கணும் என்று நச்சென்று நங்கூரம் போடுகிறார் சாந்தினி.
|
|
|
<< ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
|
 |
|
|
|