Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


சினிமா ரசிகர் மன்ற விருதுகள் அறிவிப்பு
சினிமா ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படவுலகில் சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருது வழங்குவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் நவம்பர் 8ம்தேதி சினிமா ரசிகர் மன்ற விருதுகள் வழங்கப்பட் உள்ளது. இதற்கான அறிவிப்பையும், இவ்விழாவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலையும் மேற்படி சினிமா ரசிகர் மன்றத்தின் தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா, துணைத்தலைவர் லக்ஷ்மன் ராவ், செயலாளர் பார்த்தசாரதி, நாதெள்ளா நாராயண குப்தா உள்ளிட்டவர்கள் வெளியிட்டனர். 58வது ஆண்டாக நடைபெறவுள்ள விழாவில் விருது பெறும் நட்சத்திரங்கள் விவரம் வருமாறு:

சிறந்த தயாரிப்பாளர் : ஆஸ்கார் ரவிச்சந்திரன் (தசாவதாரம்)
சிறந்த படம் : தசாவதாரம்
சிறந்த இயக்குனர் : கே.எஸ்.ரவிக்குமார் (தசாவதாரம்)
சிறந்த நடிகர் : கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த பாடலாசிரியர் : வாலி (தசாவதாரம்)
சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகை : த்ரிஷா (அபியும் நானும்)
சிறந்த நடிகை : சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த படமல்ல... பாடம் விருது : அபியும் நானும்
சிறந்த பொழுதுபோக்கு படம் : யாரடி நீ மோகினி
சிறந்த குடும்ப படம் : பிரிவோம் சந்திப்போம்
சிறந்த கதை : சுப்பிரமணியபுரம்
சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
சிறந்த குணச்சித்திர நடிகர் : பிரகாஷ் ராஜ் (அபியும் நானும்)
சிறந்த குணச்சித்திர நடிகை : ஐஸ்வர்யா (அபியும் நானும்)

இவர்கள் தவிர வினய், பசுபதி, பூஜா, சசிக்குமார், சுவாதி, கோவை சரளா, மது பாலகிருஷ்ணன், சுவேதா மோகன் உள்ளிட்டவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

திரைப்படங்களைப் போலவே சின்னத்திரையில் சிறந்த தொடருக்கான விருது திருமதி செல்வம், வசந்தம், அத்திப்பூக்கள் ஆகியவற்றுக்கும், சிறந்த சின்னத்திரை இயக்குனர் விருது ஆர்.கணேஷூக்கும் (வசந்தம்), சிறந்த சின்னத்திரை நடிகர்களுக்கான விருது சஞ்சய், சேத்தன், ஷ்யாம் கணேஷ் ஆகியோருக்கும், சிறந்த சின்னத்திரை நடிகை விருது சுஜிதா, ரம்யா கிருஷ்ணன், சந்திரா லட்சுமி உள்ளிட்டவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று தெலுங்கு, மலையாள பட உலகினருக்கும் இதே நாளில், இதே மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. நடிகர் சிவகுமார், நடிகை லட்சுமி ஆகிய இருவருக்கும் திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருதும் சினிமா ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

- தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.