|
|
சின்னத்திரை, பெரியத்திரை என்று இரு திரைகளிலும் கோலோச்சியுள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். தங்கம் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் நேற்று (15-09-09) தனது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட ரம்யா கிருஷ்ணனை நடிகர்கள் விஜயகுமார், ரவி வர்மா, ஜாய், நடிகைகம் சீமா, அனுராதா, மஞ்சு பார்கவி, காவேரி, ஜோதி மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் நாச்சியார், தங்கம் தொடரின் இணை தயாரிப்பாளரும் ரம்யாவின் தங்கையுமான வினயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.
|
| |
|
|