Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      மா­னா­ட ­ம­யி­லா­ட­..! ஏர்­போர்ட் செட்டில் அ­சத்­தல் டான்ஸ்  

கலைஞர் டி.வி.,யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த கொண்டாட்டத்துடன் விமானத்தை கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆன தினமும் சேர்ந்து கொண்டதால், வித்தியாசமான விமான நிலைய செட் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தத்ரூபமான மெகா சைஸ் ஏரோபிளேன் பேக்ரவுண்டுடன், ஏர்போர்ட் போன்ற செட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றால், நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் ஏர்போர்ட் சம்பவங்களை மையமாக வைத்து டயலாக் பேசி ஆட்டம் போட்டது கைத்தட்டலைப் பெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் நடுவர்கள் தங்களது விமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கலா மாஸ்டர் கூறுகையில், ஒருநாள் இரவு நான் ஏரோபிளேனில் சென்னையில் இருந்து வெளியூருக்கு புறப்பட்டேன். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன், மழை பெய்தது. விமானம் கீழே இறங்க தயாரான நேரத்தில் வானிலை மோசமாக இருந்‌ததால், அங்கு தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே வந்தது. வானிலை சரியானதும் மீண்டும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் பயந்து போய் அந்த விமானத்தில் செல்லாமல் வீட்டுக்கே வந்து விட்டேன், என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.