Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ஜெயாவில் மிஸ் - மிஸ்ஸஸ் ; விஜய்யில் மிஸ் - மிஸ்டர்  

மிஸ் மிஸ்ஸஸ் : ஜெயா சேனலில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிகழ்ச்சி தான் இது. தாய் மகள் தங்களுக்குள் புரிந்து கொள்ளவும், நிறை, குறைகளை அலசிக்கொள்ளவும் இடம் தரும் வித்தியாசமான முயற்சி. ரேடியோ மிர்ச்சி புகழ் அஜய், ஸ்ரீதேவி தொகுக்கின்றனர். சேனலை பாருங்க; கலந்துக்கோங்க.

***

மண்ணிசை: தமிழ், தமிழ் மணம் மாறாமல், யதார்த்தமான நிகழ்ச்சிகளை தரும் சேனல்களில் முதலில் இருப்பது என்றால் மக்கள் "டிவி' தான். பல சேனல்கள் ஒதுக்கும் விஷயங்களை தைரியமாக நிகழ்ச்சியாக தரும். திங்கள் முதல் வியாழன் தோறும் மாலை 3 மணிக்கு வரும் மண்ணிசை நிகழ்ச்சியில், நாட்டுப்புறக் கலையை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.

***

ஜீ யின் கலக்கல்: சரிகமப சேலஞ்ச் போட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பின்னணிப் பாடகர் என்று நியமித்து இணைந்து பாடுவது வித்தியாசமான முயற்சி. எம்.எஸ். விஸ்வநாதன் முன்னிலையில் நடந்த முதல் கட்ட தேர்வு விறுவிறுப்பாக இருந்தது. போகப்போக களை கட்டுவது நிச்சயம்.

***

சொதப்பல் ஏனோ? : தமிழ் இசை விருதுகள் இதை ஆங்கிலத்தில் சொன்னது, மனம் கவராத டிரம்ஸ், சரள நடை விஜய் ஆதிராஜ் தடுமாறியது, சிம்பு மட்டுமே பெரிய ஸ்டார் என்று கூறியது... இப்படி கலைஞர் இசையருவியின் விருது விழா ஏனோ ஒட்டாமல் ஆகிவிட்டது. அதனால்தான் கலைஞர் "டிவி'யில் ஒளிபரப்பவில்லையோ?

***

விநோத போட்டி : விஜய் டி.வி.யின் சென்னை மிஸ் - மிஸ்டர் போட்டி நடைபெற்ற இடம் கொழும்பு. முழுக்க முழுக்க ஆங்கிலம், புடவை போன்ற ஆடையை மேலாடை இன்றி ஆண்கள் உடுத்தி வலம், கைதட்டல் இல்லாத பெண்களின் பதில்கள் சோபிக்கவில்லையே. இலங்கை தமிழ் குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்கியதும், ஒரு அடி உயர "பட்டக்குதிரை' பொம்மையும்தான் கவர்ந்தன.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.