|
வதந்தி: சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும், "அசல்' படத்தின் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே நடைபெறுகிறது.
விசாரித்த உண்மை: உண்மைதான்! சிவாஜி பிலிம்ஸ் சார்பில், பிரபு தயாரித்து, அஜீத்குமார் - சமீரா ரெட்டி, பாவனா நடிக்கும், "அசல்' படத்தின் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க மலேசியா, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு, இரண்டு பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் மலேசியாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள், நெதர்லாந்திலும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஒரு காட்சி கூட கிடையாது.
|
| |
|
|