|
வதந்தி: கமல்ஹாசனின், கதை, வசன கருத்தரங்கு, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
விசாரித்த உண்மை: உண்மைதான்! கிண்டி, ஐ.ஐ.டி., கேம்பசில், ஒரு கதை, வசன செமினார் நடத்தினார் கமல். இதில், ஏராளமான இளைஞர்களும், உதவி இயக்குனர்களும், முன்னணி இயக்குனர்களும் கூட கலந்து பயன்பெற்ற னர். இதனால் கமல், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். "இது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று, மனம் திறந்து மகிழ்கிறார். "இனி வரும் காலங்களில், சினிமா தொழில்நுட்பங்களை, இளைஞர்களிடையே பரப்புவதே எனது தலையாய கடமை' என்று கூறுகிறார். இதில், ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுனர்களையும் வரவழைத்து, பயிற்றுவிக்க உள்ளார் கமல்ஹாசன்.
|
| |
|
|