|
வதந்தி: "வேட்டைக்காரன்' படநாயகி அனுஷ்கா, விஜயை ஓவராக புகழ்ந்து தள்ளுகிறார்.
விசாரித்த உண்மை: உண்மை தான்! "ரெண்டு' படத்தில் நடித்த போது, மாதவனை பற்றி கேட்டால், "நோ கமென்ட்ஸ்' என்று சொன்ன அனுஷ்கா, இப்போது, "வேட்டைக்காரன்' படத்தில், விஜயுடன் நடித்த அனுபவத்தை, வண்டி வண்டியாக கொட்டுகிறார். குறிப்பாக, "விஜய் சிறப்பாக நடனமாடக் கூடியவர்; ஜனரஞ்சகமாக நடிக்கக் கூடியவர். இதற்கெல்லாம் மேலாக, நடிகைகளை மதிக்கக் கூடியவர்' என்று, விஜய் மீது, ஐஸ் மலைகளை உருட்டி போட்டு வருகிறார்.
|
| |
|
|