|
தனியார் டி.வி., சேனல்கள் தினம் தினம் புதுசு புதுசு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் ஒருசில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். அந்த வரிசையில் கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடையே புகழ்பெற்ற நிகழ்ச்சி. இளம் கலைஞர்கள் கண்கவர் உடையில் பங்கேற்று தங்களது நடன திறமையை காட்டுவதும், அதற்கு நடுவர்களாக இருக்கும் கலா மாஸ்டர், குஷ்பு, ரம்பா ஆகியோர் கமெண்ட்ஸ் சொல்லி மார்க் போடுவதும் ரசிகர்களை வாரந்தோறும் மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்க வைக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் 4வது பாகம் தொடங்கியிருக்கிறது. இதில் நடுவர்களில் ஒருவரான ரம்பா பங்கேற்க வில்லை. அவருக்கு பதிலாக நடிகை நமீதா பங்கேற்றார். இனி ரம்பாவுக்கு பதிலாக நமீதாதான் நடுவராக இருப்பார் என்று கலைஞர் டி.வி., தெரிவித்துள்ளது. நடிகை ரம்பா அடுத்தடுத்து பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக சின்னத்திரை வட்டாரத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கிறார்கள்.
|
| |
|
|