Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ஜெனிலியா மீது காதல் இல்லை : ரிதீஷ் தேஷ்முக்  

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. இவர் விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும் நடித்தார். பிறகு இந்தி, தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஜெனிலியாவும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதீஷ்தேஷ்முக்கும் காதலிக்கிறார்கள் என செய்தி வெளியானது. விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார். ஜெனிலியாவும், ரிதீஷும் சேர்ந்து சினிமா விழாக்களில் பங்கேற்றனர். நட்சத்திர ஓட்டல் விருந்துகளிலும் கலந்து கொண்டனர். இந்த காதல் பற்றி ஜெனிலியாவிடம் கேட்டபோது, மறுத்தார். இருவரும் நண்பர்கள் என்றார். அதிகாரத்தை பயன்படுத்தி விலாஸ்ராவ் தேஷ்முக் மிரட்டியதால் ஜெனிலியா பயந்து மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ரிதீஷ் தேஷ்முக்கும் காதல் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நானும், ஜெனிலியாவும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் மீது இது போன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான். அதோடுதான் வாழ வேண்டி இருக்கிறது. யார் மீதும் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. காதல் என்பது ஒருவர் மீது திடீரென்று ஏற்படுவது. அப்படிப்பட்ட பெண்ணை இன்னும் நான் சந்திக்கவில்லை என்றார்.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.