Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பி.சுசீலா விருது  

பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை விருது, இந்தாண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. இதுபற்றி பி.சுசீலா கூறியதாவது: திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு எனது அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சுசீலா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகி பெற்றார். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.சவுந்திரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று யூ.கே.முரளி இசையில் பாடுகின்றனர். இதில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும். தலைமை தாங்குவதற்கு கமல்ஹாசனை அழைக்க உள்ளேன். இவ்வாறு பி.சுசீலா கூறினார்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.