Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      நா‌டோடிகள் அனன்யாவின் அடுத்த படம் சீடன்  

நாடோடிகள் படத்தில் ‌நொறுக்குத்தீனி தின்றபடியே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த‌ கேரள ப்யூட்டி அனன்யா அடுத்து சீடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தில் ப்ருத்விராஜ் - நவ்யா நாயர் நடித்த படம் நந்தனம். இப்படத்தை தமிழில் சீடன் என்ற பெயரில் இயக்கப்போகிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா. இதில் நடிகர் பிருத்விராஜே நாயகனாக நடிக்கிறார். நாடோடிகளுக்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் கேரளாவுக்கு பறந்த அனன்யா தற்போது சீடன் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் நடிக்கவுள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராமிடம் அசிஸ்‌டண்ட்டாக இருந்து கேமரா பயிற்சி பெற்ற ஸ்ரீனி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது யோகி படத்தை இயக்கி முடித்திருக்கும் ‌சுப்பிரமணியம் சிவாவிற்கு, நிறைய படங்களில் நடிக்க ஹீரோ வாய்ப்பு வாயிற் கதவை தட்டியபோதிலும் இயக்கத்தில் இன்னும் உச்சத்தை அடைய வேண்டும் என கருதிய அவர், நடிப்புக்கு நோ சொல்லி விட்டார் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.