|
|
சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்... என்று கூறியிருக்கிறார் டைரக்டர் சசிக்குமார். சுப்பிரமணியபுரம் படம் மூலம் ஹிட் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்த சசிக்குமார், நாடோடிகளில் நாயகனாக நடித்ததால் ஹிட் நாயகனாகவும் ஆனார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோது ஆபீஸ் பாய் வேலையும் பார்த்திருக்கிறேன். எல்லோருக்கும் டீ வாங்கி வந்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எனக்கு டீ வாங்கிக் கொடுத்த பத்து பேர் இருப்பார்கள். என் சொந்தக்காரர்கள் சென்னை வந்து என்னை பார்த்தபோது, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று மனம் வருந்தியிருக்கிறார்கள். நான் சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன், என்று கூறியிருக்கிறார்.
|
| |
|
|