Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      அமீரின் யோகி 27ம்தேதி ரீலிஸ்  

பருத்திவீரன் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகளை ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். யோகி படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. சென்னை மற்றும் மதுரை நகரங்களில் மட்டும் தனது டீம்வொர்க் புரொடக்ஷன் மூலம் யோகியை வெளியிடுகிறார் அமீர். யோகி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை பார்த்த தமிழ் சினிமா மூத்தோர்கள் பலரும் சுப்பிரமணியம் சிவாவை வாயார வாழ்த்தியிருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதுடன், இப்படத்தின் மூலம் சுப்பிரமணியம் சிவாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் பாராட்டி வருகிறார்களாம்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.