|
|
அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் பஞ்சாப் சிங் காதலராக வந்து கலகலப்பூட்டிய சாக்லேட் பாய் கணேஷ் வெங்கட்ராமன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்து பெயர் பெற்ற கணேஷ், அபியும் நானும் படத்தினைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் படத்தில் துடிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்தார். தனி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்த அவருக்கு தற்போது தனி நாயகன் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கவிதாலயா படத்தில்! நான் அவன் இல்லை 2ம் பாகம் படத்தை இயக்கிய வரும் டைரக்டர் செல்வா, அந்த படத்திற்கு பிறகு இயக்கும் புதிய படம் முறியடி. இப்படத்தில்தான் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு வக்கீல் கேரக்டராம். கணேஷூக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் பொள்ளாச்சியில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. படத்திற்கு இமான் இசையமைக்க, பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
|
| |
|
|