Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      சென்னையில் அஜித்தின் அசல் டீம் ; சூட்டிங்கில் பிஸி  

சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டைரக்டர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசல். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் படங்களைத் தொடர்ந்து அஜித் - சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடிக்கிறார்கள். அசல் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மலேசியாவில் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டு காட்சிகளை திருப்திகரமாக எடுத்துவிட்ட மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பியிருக்கும் அசல் டீம், தற்போது சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறது. அசல் படம் குறித்து சரண் அளித்துள்ள பேட்டியில், அசல் அஜித்தின் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும். இது முழுக்க முழுக்க கம்ஷியல் படம். படத்தின் திரைக்கதை ரொம்பவே விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் வெற்றி நிச்சயம், என்று கூறியிருக்கிறார். திட்டமிட்டபடி படத்தின் சூட்டிங் நடந்து வருவதாக சொல்லும் சரண், படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை ஏவி.எம். ஸ்டூடியோவிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார். பொங்கலுக்கு அசல் ரீலிஸ் உறுதி!
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.