|
|
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தனது முதல் படமான கஜினி மூலம் மும்பை ரசிகர்களை கிறங்கடித்தார். அதன் பிறகு நடித்த லண்டன் ட்ரீம்ஸ் சமீபத்தில் வெளியானது. கஜினி அளவுக்கு படம் ரசிகர்களை கவரா விட்டாலும், அசின் மார்க்கெட் இறங்கவில்லை. இந்நிலையில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர அசினுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அபிஷேக் நாயகனாக நடிக்கும் கெஹ்லேங்கே ஹம் கீ ஜான் சே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க அசினிடம் கால்ஷீட் கேட்டனர். முதலில் ஓ.கே., சென்ன அசின் இப்போது, கால்ஷீல் இல்லை என்று ஜகா வாங்கிக் கொண்டாராம். ஏன் இந்த மனமாற்றம் என்று பாலிவுட் பக்கம் விசாரித்தால், லண்டன் ட்ரீம்ஸ் படம் சரியாக போகாததால் அப்செட் ஆகியிருக்கும் அசின், இனி நல்ல கதையுள்ள படத்தில்தான் கமிட் ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அபிஷேக்குடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பில் தனது வேடத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததாலும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
|
| |
|
|