Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      சேக்ஸ்போன் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள்  

புல்லாங்குழல் இசைக்கலைஞராக அறிமுகமாகி சேக்ஸ்போன் எனும் இசைக்கருவியை வாசிப்பதில் அனுபவம் பெற்றிருக்கும் எஸ்.நாதன் தனது மானசீக குரு எம்.எஸ்.விஸ்வநாதனின் சூப்பர் ஹிட் பாடல்களை சேக்ஸ்போன் இசையில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசை நாளை (6ம்தேதி) நிறைவேறப்போகிறது. ஐ.டி. துறை தொழிலதிபர் தேவய்யா, நாத‌னுடன் இணைந்து சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் ஹிட் பாடல்களில் முத்தான முப்பது பாடல்களை தேர்ந்தெடுத்து தனது சேக்ஸ் போனில் வாசிக்கவிருக்கிறார் எஸ்.நாதன். அவரது பின்னணியில் கோரஸ் பெண்கள் உள்ளிட்ட 45 கலைஞர்கள் இசைக்கருவிகள் வாசித்து நிகழ்ச்சியை வண்ணமயமாக்க இருக்கிறார்கள். நிகழ்ச்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ‌தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி மெகா ஜிகா ஷோ என்ற நிறுவனம் இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.