|
|
டெய்ஸிபோபண்ணா, நிதி சுப்பையா, சுஹாசினி ஆகி மூன்று புதுமுகங்கள் ஜோடியாக ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் காதலன் காதலி. படத்தில் மூன்று நாயகிகள் இருப்பதால் காதலன் காதலிகள் என்றல்லவா டைட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஆகாஷிடம் கேட்டால், சஸ்பென்ஸ் பதில் சொல்கிறார். 3 கதாநாயகியர் காதலிகளாக இருந்தாலும், யார் ஹீரோ மீது உண்மையான காதல் வைக்கின்றார் என்பதுதான் கதையே. அதனால்தான் காதலன் காதலி என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்கிறார். ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜே.வி.நிஷா தயாரிக்கும் இப்படத்தை ஜாக்ஸி ஜான் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் ஆகாஷின் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு நந்தன்ராஜ் எனும் புதியவர் இசையமைக்கிறார்.
|
| |
|
|