|
|
ஏற்கனவே ஒருவர் காதலித்து வரும் நடிகரை இன்னொரு நடிகை காதலிப்பதும், ஏற்கனவே காதலித்து வரும் நடிகையை இன்னொரு நடிகர் காதலிப்பதும் சினிமா உலகில் புதிதல்ல. அவ்வப்போது இப்படி காதல் விளையாட்டுக்கள் பற்றிய செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வரிசையில் இப்போ இணைந்திருப்பது ரன்பீர் - கத்ரீனா ஜோடி. ஆரம்பத்தில் சல்மான்கானுடன் உலா வந்த கத்ரீனா... சமீப காலமாக ரன்பீரை சுற்றிச்சுற்றி வருகிறாராம். ரன்பீர் இருக்கும் சூட்டிங் ஸ்பாட்டை தேடிப்பிடித்து வரும் கத்ரீனா... அவருடன் ஊர் சுற்று வைபவத்தையும் தொடங்கியிருக்கிறார். இது ரன்பீரின் காதலி தீபிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ரன்பீரை கழற்றி விட்டுவிட்டாராம் தீபிகா. ஏற்கனவே ரன்பீருக்காக நிஹர் பாண்ட்யா, யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களை வெட்டி விட்டவர்தான் இந்த தீபிகா என்பது கொசுறு தகவல்.
|
| |
|
|