|
|
இயக்குனர்கள் நடிகர் ஆவதும், நடிகர்கள் தயாரிப்பாளர் ஆவதும் சினிமா உலகில் புதிதில்லை. அந்த வரிசையில் புதிதாக இணையப்போகிறார் நடிகை சோனா. குசேலன் படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்து தனது கவர்ச்சி கட்டுடலால் ரசிகர்களை கட்டிப்போட்ட சோனா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப்போகிறார். இவர் எடுக்கப்போகும் படத்தின் நாயகனாக பிரேம்ஜி நடிக்கிறார். யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். இரண்டு இயக்குனர்கள் பெயரை பரிசீலித்து வரும் சோனா, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் பெயர்களையும் விரைவில் அறிவிக்க உள்ளார். தற்போது கோவா படத்தில் நடித்து வரும் பிரேம்ஜிக்கு, அப்படத்தில் முக்கிய கேரக்டராம். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் கோவா, பிரேம்ஜியை தனி நாயகன் அந்தஸ்த்துக்கு உயர்த்தி காட்டும் என நம்புவதால் அவரையே நாயகனாக்கி விட்டாராம் சோனா. டிசம்பரில் சோனாவின் புதிய படத்தின் சூட்டிங் தொடங்கவிருக்கிறது.
|
| |
|
|