|
|
புதுமுக நாயகி நந்தகியிடம் நடிகர் ஜெய் வாலாட்டியிருக்கிறார். மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் அவள் பெயர் தமிழரசி. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அ.பெ.த. குழுவினர், சூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள் குறித்து பேசினார்கள். நாயகி நந்தகி பேசும்போது, இந்த படத்தில் நான் ஜெய்க்கு ஜோடியா நடிச்சிருக்கேன். அவர் பயங்கர வாலு என்று வெளிப்படையாகவே சொன்னார். அப்போது குறுக்கிட்ட ஜெய், அதுக்காக நான் எல்லார்கூடவும் இப்படிருப்பேன்னு நினைச்சிடாதீங்க. நந்தகிக்கிட்ட மட்டும்தான், என்றார். சரி... அதென்ன நந்தகி...! நந்தகின்னா பெண் சங்கு என்று அர்த்தமாம். நந்திதா தாஸ் எனக்கு பிடிச்ச நடிகை. அதனால் அவர் சாயலிலேயே ஒரு பெயரை யோசித்தேன். அப்போது கிடைத்த பெயர்தான் இந்த நந்தகி, என்கிறார் டைரக்டர் மீரா கதிரவன்.
|
| |
|
|