|
|
நடிகை கனிகாவுக்கு சிறந்த நடிகைக்கான அம்மா விருது வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு பின்னரும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் கனிகா நடிப்பில் வெளியான பாக்ய தேவதா படம் கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது. சமீபத்தில் வெளியான பழசிராஜா படமும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் இருக்கும் கனிகாவுக்கு மேலும் ஒரு சந்தோஷமாக, துபாயில் நடக்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட உள்ளது. துபாயில் ஒவ்வொரு ஆண்டும் அம்மா என்ற பெயரில் மலையாள திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கனிகாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 6ம்தேதி சார்ஜாவில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் கனிகா கலந்து கொண்டு அம்மா விருதை பெறுகிறார்.
|
| |
|
|