Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      பரத்வாஜின் புது ஸ்டூடியோவில் அசல் பாடல் ரெக்கார்டிங்  

இசையமைப்பாளர் பரத்வாஜ் சென்னை தி.நகரில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை திறந்திருக்கிறார். காதல் மன்னன் படத்தில் தனது இசை பயணத்தை தொடங்கிய பரத்வாஜ் அதன் பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அஜித்தின் அசல் படத்துக்கு இசையமைத்து வரும் பரத்வாஜ், சென்னை தி.நகரில் ஜே.ஜே. என்ற பெயரில் ஸ்‌டூடியோ தொடங்கியிருக்கிறார். இந்த ஸ்டூடியோவை பரத்வாஜின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சரண் திறந்து வைத்தார். மோதி விளையாடு படத்தைத் தவிர சரணின் அ‌னைத்து படங்களுக்கும் இசைமத்தவர் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் டைரக்டர் தங்கர் பச்சான் மற்றும் பரத்வாஜின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். அஜித்தின் அசல் பட பாடல் ரெக்கார்டிங் இந்த ஜே.ஜே. ஸ்டூடியோவில்தான் நடைபெறவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.