|
|
பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை வைத்து இயக்கியிருக்கும் சித்து படத்தில் தமிழ் சினிமாவின் தற்போதைய எழுதப்படாத நியதிப்படி ஒரு ரீ-மிக்ஸ் பாடல் இடம்பெறுகிறது. இது நம்ம ஆளு படத்தில் இடம்பெற்ற நான் ஆளான தாமரை... பாடல்தான் அந்த குத்தாட்ட கலக்கல் பாடல். இந்த பாடலை பாடியிருப்பவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போதைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ஆங்கில கலப்புடன் உருவாகியிருக்கும் இந்த பாடல் சித்து படத்தின் ஹைலைட்டாகவும், ரசிகர்களை குதூகலப்படுத்தும் பாடலாகவும் இருக்கும் என்கிறார் டைரக்டர் கம் நடிகர் பாக்யராஜ். இந்த படத்தில் இடம்பெறும் பூவே பூவே எனத் தொடங்கி தொடரும் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார் என்பது இன்னொரு ஹைலைட்.
|
| |
|
|