|
|
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவில் தொடங்கி, பிரியங்கா திரிவேதி, பிரியங்கா என மூன்று பிரியங்காக்கள் இதுவரை தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் மேலும் ஒரு பிரியங்கா தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். கன்னட படவுலகில் நுழைந்து சீனா, மகரிஷி, டென்த் கிளாஸ் ஆகிய படங்களில் நடித்த கையோடு தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கும் புதிய பிரியங்காவின் முழு பெயர் பிரியங்கா சந்திரா. தமிழில் டைரக்டர் ரொமோஷிவா இயக்கத்தில் உருவாகி வரும் கல்லூரி காலங்கள் என்ற படத்தின் நாயகியாக அறிமுகமாகிறார் இந்த பிரியங்கா. படத்தின் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் சுகுமார் நடிக்கிறார். டி.வாசுதேவன் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் ஏற்காடு மலைப்பகுதியிலும், ஈரோடு மற்றும் ஐதராபாத்திலும் நடக்கவிருக்கிறது. பாடல் காட்சிக்காக மலேசியாவுக்கு பறக்கவிருக்கிறது கல்லூரி காலங்கள் டீம்.
|
| |
|
|