|
|
தமிழ் சினிமாவின் ஹாட் ஹீரோயின்ஸ் பட்டியலில் நமீதாவுக்கு அடுத்த இடத்தை ஒரே படத்தில் பிடித்திருப்பவர் நடிகை ஹேம மாலினி. மராட்டி பெண்ணான இவர் சமீபத்தில் வெளியான இந்திர விழா படத்தில் நமீதாவுக்கே செக் வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருந்தார். கோடம்பாக்கத்தையே ஆட்டம் காண வைத்த அந்த கவர்ச்சியை பார்த்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அனைத்துமே கிளாமர் வேடங்கள்தான். ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஹேமமாலினி ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறாராம். இனி தனது ஒரிஜினல் பெயரான ஸ்ருதி பிரகாஷ் என்ற பெயரிலேயே நடிக்கப் போவதாக சொல்கிறார் ஹேமமாலினி. இந்திரவிழாவில் அறிமுகமானபோது இயக்குனர் ராஜேஷ்வர் வைத்த பெயர்தான் ஹேமமாலினி. இந்தப் பெயர் கொண்ட நடிகை முன்பு திரையுலகில் நடித்து புகழ்பெற்ற நடிகையாம். அதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார். ஆனால் இப்படி பிரபலமானவரின் பெயரை வைத்துக்கொண்டு நடித்து, ஒரு வேளை ரசிகர்கள் மத்தியில் நான் ரீச் ஆகாமல் போய்விட்டால் அது அந்த பிரபல நடிகையின் பெயரை கெடுத்த மாதிரி ஆகிவிடும் இல்லையா? அதனால் என்னுடைய உண்மையான பெயரான ஸ்ருதி பிரகாஷ் பெயரிலேயே நடிக்க விரும்புகிறேன். அதனால், இனி நான் ஹேமமாலினி இல்லை, ஸ்ருதி பிரகாஷ் என்கிறார் ஹேமமாலினி.
|
| |
|
|