|
|
சத்யம், தோரணை என அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வியால் கலங்கியிருந்த விஷால் இப்போது புதுஉத்வேகத்துடன் தீராத விளையாட்டு பிள்ளையாக புறப்பட்டிருக்கிறார். திரு என்ற புதுமுக டைரக்டர் இயக்கும் தீராத விளையாட்டு படத்தில் சாக்லேட் பாய் போல வேடமேற்றிருக்கிறாராம் விஷால். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதைக்கு ஆக்ஷன் பக்கம் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். தீராத விளையாட்டு பிள்ளை படம் ஜாலியான மேட்டர். ஜீன்ஸ், ஹைடெக் மொபைல், பைக், ஐ பாட்னு கடலை போட திரியிற ஒரு பையனா வர்றேன், என்று கூறியுள்ளார். படத்தின் விஷாலுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
|
| |
|
|