|
|
அசல் படம் வெளியான பிறகு முழு நீள கவர்ச்சிப் பாத்திரங்களுக்குத் தாவப் போகிறாராம் பாவனா. தமிழ் திரையுலகுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர் பாவனா. பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் இருப்பதால் இதுவரை தமிழில் கவர்ச்சி பக்கம் அவர் போகவே இல்லை. ஆனால் இதுவே அவருக்கு எதிராகி விட்டது. கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் பாவனாவின் ஹோம்லி நடிப்பெல்லாம் எடுபடவில்லை. விளைவு கையில் படம் இல்லாத நிலை. அசல் படத்துக்குப் பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய திட்டம் வைத்துள்ளாராம் பாவனா. அதில் முதலாவது, கவர்ச்சி களத்தில் குதிப்பது. பெரிய அளவில் கேரக்டருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடாத வகையில் கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம். அதேபோல முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இனி நடிப்பாராம். இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடிக்க மாட்டாராம். இந்த முக்கிய முடிவுகளை எல்லாம் அசல் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் அமல்படுத்த பாவனா திட்டமிட்டிருக்கிறாராம்.
|
| |
|
|