|
|
திருநெல்வேலி தமிழ், கோவை தமிழ், மதுரை தமிழ், சென்னை தமிழ் என்று ஏராளமான மொழிகள் தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் முறையாக தஞ்சாவூர் பகுதி கிராம மொழி களவாணி என்ற படத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதுபற்றி படத்தின் அறிமுக இயக்குனர் சற்குணம் அளித்துள்ள பேட்டியில், களவாணி ஒரு விறுவிறுப்பான சுவாரஸ்யமான யதார்த்த சினிமா. ஒரு ஊரில் இருந்து பக்கத்து ஊருக்கு படிக்க வர்ற பொண்ணோட மனசை களவாடுற கதை. தஞ்சாவூர் பகுதி கிராமங்களுக்குன்னு ஒரு மொழி இருக்கு. இதுவரைக்கும் எந்த தமிழ் சினிமாவிலும் பதிவு செய்யப்படவே இல்லை. அந்த குறை இந்த சினிமாவில் தீரும், என்று கூறியிருக்கிறார்.
|
| |
|
|