|
|
முன்பெல்லாம் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான விளம்பர படங்களில்கூட நடிக்க முன்னணி ஹீரோக்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது காலம் மாறிப் போச்சு. பாலிவுட்டின் முன்னணி நாயகன் அமீர்கான் எய்ட்ஸ் விழிப்புணர்வு படமொன்றில் நடித்து வருகிறார். காஞ்சிவரம் படத்தின் வெற்றி தேசிய விருதை பெற்றுத்தந்த மகிழ்ச்சியில் இருக்கும் டைரக்டர் ப்ரியதர்ஷன், அடுத்தும் அவார்டை குறி வைத்தே படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார். அவர் எடுத்து வரும் எய்ட்ஸ் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில்தான் நாயகனாக அமீர்கான் நடிக்கிறார். இதில் அவர் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
|
| |
|
|