|
|
காமெடியிலும், குணசித்திர நடிப்பிலும் வெளுத்து கட்டும் மயில்சாமி, தனது மகனை ஹீரோவாக களமிறக்க உள்ளார். இதற்காக தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் தனது மகனை அறிமுகப் படுத்தி வருகிறார். மயில்சாமி மகன் நந்துவின் அழகிய தோற்றத்தையும், துடிப்பையையும் கண்ட இயக்குனர்கள், விரைவில் உன் மகன் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவான் என்று கூறி மயில்சாமியை உற்சாகப் படுத்தி வருகின்றனர். அப்படியென்றால் விரைவில் மயில்சாமி மகன் நந்துவை ஹீரோவாக தமிழ் சினிமாவில் பார்க்கலாம்!
|
| |
|
|