|
|
சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி கணவரை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரிந்த ராக்கி சவந்த்தை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இப்போது அவர், ராக்கி சாவந்த் தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 24 வயதான அந்த வாலிபரின் பெயர் ஜதீன். ராக்கி சாவந்த்தின் சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான இவர் அமிர்தசரஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராக்கி சாவந்த் மீது நான் உயிரையே வைத்திருந்தேன். அவரை அமிர்தரஸ் நகருக்கு வருமாறு கோரியிருந்தேன். அவரும் வருவதாக கூறியிருந்தார். இதை நம்பி 2 முறை ரூ. 5 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால் அவர் வரவே இல்லை. நான் அவர் மீது வைத்திருந்த உண்மையான காதலை கேலிக் கூத்தாக்கி விட்டார் ராக்கி. எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டார். ராக்கியை அடைவதற்காக நான் அவர் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில்கூட பங்கேற்றேன். அவரது பெயரை நான் மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளேன். இதையெல்லாம் அறிந்த பின்னர்தான் சுயம்வரம் நிகழ்ச்சியில் என்னை பங்கேற்குமாறு ராக்கியே அழைத்தார். தற்போது அவர் ஏமாற்றி விட்டார். அவருக்காக நான் செலவு செய்த ரூ. 5 லட்சம் பணத்தை தர அவருக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரியுள்ளார்.
|
| |
|
|