|
|
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பாலிவுட் ப்யூட்டி கத்ரீனா கைப், காமெடி பண்றது ரொம்ப கஷ்டமான வேலை என்று கூறியிருக்கிறார். நமஸ்தே லண்டன், சிங் இன் கிங், நியூ யார்க் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ள கத்ரீனா கைப், தற்போது நடித்து வரும் புதிய படம் அஜப் பிரேம் கி கசாப் கஹானி. முழுக்க முழுக்க காமெடியை மையமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இந்த படம் குறித்து கத்ரீனா அளி்த்துள்ள பேட்டியில், ராஜி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நானும் காமெடி பண்ணுகிறேன். காமெடி பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்னு இதுல நடிக்கிறப்ப புரிஞ்சுக்கிட்டேன், என்று கூறியுள்ளார்.
|
| |
|
|