|
|
சமுதாய தொண்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ள அசின், தன்னால் முடிந்த அளவு குழந்தைகளின் கல்விக்கு உதவி புரிந்து வருகிறார். தற்போது, பாலிவுட்டில் படு பிஸிசாகி விட்ட அவர், தனது சமுதாய தொண்டினை சென்னையிலேயே அதிகம் செய்கிறாராம். அப்படித்தான் தற்போதும், வறுமையில் உள்ள ஐந்து குழந்தைகளுக்கு தேவையான கல்வி கட்டணத்தை அவரே முன்வந்து கட்டியுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அவசியம், இதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று கூறி வரும் அசின், எந்த பப்ளிசிட்டியும் இல்லாமல் இந்த சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
| |
|
|