|
|
நடிகர் அசோக்குமார் போல 80 வயது வரை முக்கியமான ரோல்களில் நடித்துக் கொண்டிருப்பேன் என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். அமிதாப் பச்சனுக்கு இன்று (11ம்தேதி) 67வது பிறந்த நாள். இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது திரையுலகில் பிஸியாக இருக்கிறேன். அதனால் இப்போதைக்கு ஓய்வு பெறும் ஐடியா இல்லை. இந்த விஷயத்தில் நடிகர் அசோக் குமார் போல இருக்க நினைக்கிறேன். அவர் தனது 80வது வயது வரை முக்கியமான ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதேபோல நானும் 80 வயது வரை நடிக்க விரும்புகிறேன். இனிமேல் என்னால் மரத்தை சுற்றி வந்து காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் என் வயதுக்கு எது பொருத்தமாக இருக்குமோ... அந்த ரோல்களில் நடிப்பேன், என்று கூறியுள்ளார்.
|
| |
|
|