|
|
இயக்குனர் பாலாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்த படம் பிதாமகன். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதற்கான உரிமையை பாலாவிடம் இருந்து இயக்குனர் சதிஷ் கௌசிக் பெற்றுள்ளார். இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டா போட்டி போட்ட போதும் கௌசிக்கிற்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்த கௌசிக் தான் பாலாவின் சேது படத்தை இந்தியில் சல்மான், பூமிகா ஜோடியை வைத்து தேரே நாம் என்ற பெயரில் மீண்டும் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமுக்கு தேசிய விருது வாங்கி தந்த இந்த படத்தின் இந்தி பதிப்பில், விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் சஞ்சய் தத். மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.
|
| |
|
|