Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      "தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி  

விஜய்யின் "வில்லு' படத்தில் "தீம் தணக்க தில்லானா' பாடலை பாடிய திவ்யா விஜய், தற்போது விஜய் "டிவி' சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்து வருகிறார். "பேட்டி'க்காக சந்தித்தபோது "கர்நாடக இசையை முறையாக கற்றுக் கொண்டதால் இந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் காம்பியரிங் செய்ய முடிகிறது'' என்றார். திவ்யா விஜய்யின் ஆர்வப் பேட்டி:

டிவி', சினிமாவில் பணி புரிந்தால் பணம், புகழ் கிடைக்கும் என்று நினைப்பில் தானே இந்த துறைக்கு வந்தீர்கள்?

கர்நாடக இசை தெரிஞ்சதால தான் சினிமாவில் பாடுவதற்கும்"டிவி' நிகழ்ச்சிகளில் காம்பியரிங் வாய்ப்பும் எனக்கு கிடைச்சிருக்கு. அம்மாவின் ஆசை தான் இதற்கு முழுக்க, முழுக்க மூலகாரணம். ஆரம்பத்தில கர்நாடக இசை கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் இல்லை. அம்மாவுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. என்னை இசை கத்துக்க சொன்னப்ப நான் முடியாதுன்னு தான் சொன்னேன். இசையோட அருமை உனக்கு இப்ப தெரியாது, நீ கத்துக்கிட்டு பாடும் போது இசையோட அருமை உனக்கு தெரியும். சந்தோஷப்படுவேன்னும் சொன்னாங்க. நான் கர்நாடக இசை கத்துக்க ரொம்ப உதவினாங்க. அம்மாவோட அந்த உதவியால தான் நான் யார்ன்னு இன்னைக்கு பலருக்கு தெரிஞ்சிருக்கு. அம்மாவுக்கு இந்த தருணத்தில நன்றி சொல்லிக்க விரும்பறேன். உழைப்புக்கு பணம், புகழ் கிடைத்தால் சந்தோஷம் தான்.

விஜய் "டிவி'யில் "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சியில் காம்பியரிங் செய்வது திருப்தியா?

புதிய நிகழ்ச்சிகளை வித்தியாசமா, ஈர்ப்பா மக்களிடம் அறிமுகம் செய்வதில் விஜய் "டிவி'யை யாரும் மிஞ்சிட முடியாது. குழந்தைகளிடம் உள்ள இசையாற்றலை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சி அமைஞ்சிருக்கு. ரொம்ப திருப்தியா இருக்குங்க.

இசை போட்டி நிகழ்ச்சியில் பாடுவதில் உங்களை அசத்திய குழந்தைகள் பற்றி?

"சூப்பர் சிங்கர் ஜூனியர் 2'வில் கலந்திட்டிருக்கிற குழந்தைகளிடம் நிறைய டேலண்ட் இருக்கு. ஒவ்வொரு போட்டியிலும் ஆச்சரியப்படும்படி அவுங்களோட டேலண்ட் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. பாடுவதற்கு கஷ்டமான பாடல்களை கூட ஈசியா பாடி அசத்துறாங்க. நிகழ்ச்சியில இந்தக் குழந்தை தான் "பெஸ்ட்'டா பாடுதுன்னு அவசரப்பட்டு கணிச்சிட முடியாது. ஒருத்தரை விட ஒருத்தர் டேலண்ட்ல குறைஞ்சவங்க இல்லைன்னு நிகழ்ச்சியை பார்த்தாலே தெரியும். இசை ஆர்வத்துடன் போட்டிக்கு வந்திருக்கும் எல்லா குழந்தைகளுமே எனக்கு பிடிச்ச குழந்தைங்க தான்.

முதலில் சினிமாவில் பாடுவதற்குத்தான் முயற்சித்ததாக பேசப்பட்டதே,"டிவி' பக்கம் வந்திருப்பது பற்றி?

கர்நாடக இசை கத்துக் கிட்டதால மேடைக்கச்சேரிகள் நிறைய பண்ணியிருக்கேன். சினிமாவில் பாடுவதற்கு முயன்றப்ப தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரெடி, கிங் ஆகிய படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைச்சது. "சிலம்பாட்டம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான "மாவாடு' படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையிலும் பாடியிருக்கேன். தமிழில் "வில்லு' படத்தில "தீம் தணக்க தில்லானா' பாடல் என்னை நிறைய ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கு. தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 15 படங்களில் பாடியாச்சு. தமிழகத்திலும்,கேரளாவிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன். மலையாளத்தில கைரளி "டிவி' சேனலில் "கந்தர்வ சங்கீதம்' நிகழ்ச்சியை காம்பியரிங் செய்தப்ப கேரள மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்ப விஜய் "டிவி'யில் கிடைச்ச இந்த காம்பியரிங் வாய்ப்பு தமிழகத்திலும் நிறைய பேருக்கு என்னை யார் என்று தெரியவச்சிருக்கு. சந்தோஷமாயிருக்கு.

நினைச்ச இலக்கை எட்டிவிடுவோம் என்று நம்பிக்கை பற்றி?

உழைப்புக்கு வருவாய் கிடைச்சா போதும்ன்னு நினைச்சு ஒரு தொழிலை செய்யும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அந்த தொழிலை பயபக்தியோடும், ஆர்வத்தோடும் செய்யும் போது கிடைக்கிற சந்தோஷமும், மனதிருப்தியும் அலாதியானது. மனசுக்கு இதமாக இருக்கும். பயபக்தியோடும், ஆர்வத்தோடும் இந்த துறையில காலடி வச்சிருக்கேன். அதனால உயர்வேன்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு.

யாரோட இசையில் பாட ஆசை?

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு. நிச்சயம் பாடுவேன்ங்கிற நம்பிக்கையும் இருக்கு.

நீங்க பாடிய பாடலை கேட்டுவிட்டு இசையமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வந்ததா?

"நாம 15 படங்கள்ல பாடிட்டோம். அதனால இசையமைப்பாளர்கள் உடனே அழைப்பு விட்டு பாட அழைப்பாங்கங்கிற நினைப்பெல்லாம் எனக்கில்லை. பாடலில் என்னோட குரல் வளத்தை தெரிஞ்சுக்கிட்டு அழைப்பு வந்தா உடனே ஏத்துக்கிட்டு அவுங்க எதிர்ப் பார்ப்புபடி பாடிட முடியும். எந்த பாடலை யாரு பாடினால் சரியா இருக்கும்ன்னு இசையமைப்பாளர்களுக்கு தெரியும். திவ்யா பாடினா சரியாயிருக்கும்னு நினைச்சா கண்டிப்பா எனக்கு சான்ஸ் தேடி வரும். வராட்டியும் வருத்தப்படக்கூடாது,'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன திவ்யா விஜய் காம்பியரிங் செய்ய புறப்பட்டார்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
நடிகை ஆர்த்தி - நடிகர் ‌கணேஷ் காதல் திருமணம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.