மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு உள்பட பலர் நடித்த படம் கடைக்குட்டி சிங்கம், பசங்க பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். 2டி என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.
படித்த இளைஞரான கார்த்தி விவசாயம் செய்வதும், அவரது அத்தை மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினுவை விட்டுவிட்டு அவர் சாயிஷாவை காதலிக்க அதனால் வரும் பிரச்னைகளும் தான் கதை. கிராமியம் சார்ந்த மண்வாசனை படமாக வெளிவந்து வெற்றி பெற்ற படம்.
கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி வெளிவந்த இந்தப் படம் சரியாக 4 மாதங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வருகிற 14ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.