இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் நிமிர். மலையாளத்தில் வெளிவந்த மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தின் ரீமேக். தமிழில் பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். உதயநிதியுடன் நமீதா புரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், துளசி உள்பட பலர் நடித்திருந்தார்கள். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார், துர்பகா சிவா இசை அமைத்திருந்தார்.
தன்னை பொது இடத்தில் அடித்தவனை அதே இடத்தில் அடித்து தான் இழந்த இமேஜை மீட்க துடிக்கிற இளைஞனின் கதை. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு சுமாரான வரவேற்பை பெற்ற படம். வெளியான நான்கே மாதங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நாளை காலை 9 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.