ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்த படம் மாநகரம். சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற படம். பொட்டேன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பிரபு இணைந்து தயாரித்திருந்தார்கள். லோகேஷ் கனகராஜ் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் வருகிற தீபாவளி அன்று காலை 10 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.
ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, ராம்தாஸ், மதுசூதனராவ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதில் நான்கு கதைகள் அவற்றுக்குள் எந்த தொடர்பும் கிடையாது. கிளைமாக்சில் ஒன்று சேரவும் சேராது. ஆனால் ஒவ்வொரு கதையும் இன்று கதைக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்லுகிற புதுமையான திரைக்கதை. நகர வாழ்க்கையின் இன்னொரு முகத்தை காட்டிய படம். தீபாவளி விருந்தாக தருகிறது விஜய் டி.வி.