நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். பதஞ்சலி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். பாபா ராம்தேவ் இப்போது விஜய் தொலைக்காட்சியில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை யோக கற்றுத் தருகிறார்.
யோகாவின் தொடக்கம் முதல் பதஞ்சலி யோகா வரையில் படிப்படியாக வகுப்பெடுக்கிறார். அவர் சின்னத்திரையில் விளக்க உரையுடன் செய்து காட்டுவதை நேயர்கள் வீட்டில் அமர்ந்தபடியே செய்து பழகலாம். பாபா ராம்தேவிற்கு தமிழ் தெரியாது என்பதால் அவரது இந்தி பேச்சு தமிழில் டப் செய்து ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகாலை மார்கெட்டிற்கு இந்த நிகழ்ச்சி நன்றாக உதவுவதாக கூறுகிறார்கள்.
வட இந்திய சேனல்களில் யோகா நிகழ்ச்சி நடத்திய ராம்தேவ் தற்போது தமிழ் சேனலுக்கு வந்திருப்பது. தனது பதஞ்சலி பொருட்களின் மார்க்கெட்டை விரிவுபடுத்துதற்குத்தான் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.