சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரோல் மாடல்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகர் பஹத் பாசில். கதாநாயகியாக நமீதா பிரமோத் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆசிரியர்களாக பணிபுரியும் தனது பெற்றோர்களால் சின்ன வயதில் இருந்தே, ரொம்பவும் கட்டுப்பாடாக வளர்க்கப்படும் பஹத் பாசிலின் வாழ்க்கை, அவர் கல்லூரி மாணவனாக மாறியதும் எப்படி திசை மாறுகிறது என்பதும் அதன்பின் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும் தான் படத்தின் கதையாம்.
சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது டாக்டர் ஒருவரிடம் பஹத் பாசில் பற்றி அவரது நண்பர் ஒருவர் 'டாக்டர் அவர் அந்நியனா..? இல்லை மாயாவியா..?" என கேட்கிறார். அந்நியன் பற்றி நமக்கு தெரியும்... தன்னையறியாமலேயே அந்நியனாக மாறி எதிரிகளை தாக்குபவன் அந்நியன். அதேசமயம் மாயாவி, மம்முட்டி நடித்த மலையாள படம்.
அந்தப்படத்தில் அவரது கேரக்டரின் பெயர் மாயாவி.. எதிரிகளை தாக்கும்போது தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் தாக்குபவன் மாயாவி.. இந்தப்படத்திலும் பஹத் பாசில் எதிரிகளை தாக்கும் விதம் மிகவும் மர்மமாக பின்னப்பட்டுள்ளதாம். அதனால் தான் இப்படி ஒரு வசனத்தை படத்தில் இடம்பெற வைத்துள்ளாராம் இயக்குனர் ரபி மெக்கார்டின். இந்தப்படம் இன்று வெளியாகியுள்ளது.