பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித்திற்கு வருகிற மே 1ந் தேதி பிறந்தநாள். மே 1 உழைப்பாளர் தினம், இதையொட்டி தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. குறிப்பாக அஜித் படங்களை போட்டிபோட்டு ஒளிபரப்புகிறது. ஜெயா டி.வி தல ஸ்பெஷல் என்ற தலைப்பில் அஜித்தின் 3 படங்களை ஒளிபரப்புகிறது.
இன்று (ஏப்ரல் 29) மாலை 6 மணிக்கு ஆரம்பம் படம் ஒளிபரப்பாகிறது. இதில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ளனர். யுவன் இசை, விஷ்ணுவர்த்தன் இயக்கம். நாளை மாலை 6 மணிக்கு என்னை அறிந்தால் படம் ஒளிபரப்பாகிறது. இதில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, பார்வதி நாயர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. கவுதம் வாசுதேவ மேனன் இயக்கம்.
அஜித் பிறந்த நாளான மே முதல் தேதியில் காலை 11 மணிக்கு வேதாளம் படம் ஒளிபரப்பாகிறது. இதில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்திருந்தார். சிவா இயக்கி இருந்தார். மூன்று படங்களையும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக தருகிறது ஜெயா டி.வி.