ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஹாரர் படம் 'மாயா'. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இப்படம் வசூலில் சாதித்தது. விமர்சகர்களிடமும் பாராட்டு பெற்ற மாயா படத்தை 100 நாட்கள் ஓட்டினார்கள் அப்படத்தை தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தினர்.
தங்களுடைய முதல் தயாரிப்பு என்பதால் 100 நாட்கள் ஓட வைத்து வெற்றிப்படமாக்கினார்கள். சற்றே வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் ரான் ஏதன் யோஹான் என்பவர் இசை அமைத்திருந்தார். அவரது இசையும் ஒளிப்பதிவும் இப்படத்தில் மிகவும் பேசப்பட்டன!
'மாயா' படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டநிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை வாங்கிய தனியார் டி.வி. ஒன்று 'மாயா' படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யவிருக்கிறார்கள்.