இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்த படத்தின் டைட்டிலிலேயே ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பாணியில் இது இருக்கும். ஆனால் காமெடி செய்கிறவர்கள் தனி நபராக இல்லாமல் ஒரு குழுவா இருப்பார்கள்.
இதில் ஊர்வசி, கோவை சரளா, ரமேஷ் கண்ணா என திரை நட்சத்திரங்கள் நடுவர்களா இருந்து திறமையான அணியை தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அணிக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது. வருகிற 23ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்து திறமையாளர்கள் இதற்காக வரவழைக்கப்படுகிறார்கள்.