ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் சவுமியா. பிரபல கர்நாடக இசைப் பாடகி. பாடலை சரியாக விமர்சனம் செய்து தீர்ப்பளிக்கும் நீதிபதிகளில் இவரும் ஒருவர். சவுமியா இப்போது சினிமா நடிகையாகிவிட்டார்.
சின்னத்திரை தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் வானவில் வாழ்க்கை படத்தில் நடித்திருக்கிறார் சவுமியா. கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் நடன போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் சவுமியா ஹீரோயின் ஜனனியின் அம்மாவாக நடித்திருக்கிறார். அதாவது மகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து அவளை பெரிய பாடகியாக்க விரும்பும் அம்மாவாக நடித்திருக்கிறார்.
முதலில் நடிக்க மறுத்த சவுமியா பின்னர் கதை கேட்டு... அது பிடித்து... கணவர், குழந்தைகள் சம்மதத்துடன் நடித்துள்ளார். படத்தில் நடிப்பதற்காக பல இசை நிகழ்ச்சிகளையும், வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்து நடித்து கொடுத்தாராம் சவுமியா. தொடர்ந்து நடிப்பது பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது என்கிறார் சவுமியா.