இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாசமலர், தென்றல் தொடர்களில் நடித்து வரும் டயானா விடியும் வரை பேசு, ஒக்கேனக்கல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, பெரிய திரையில் பிசியாக நடித்தாலும் தன் படிப்பையும் விடாமல் தொடர்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக டி.விக்கு அறிமுகமானேன். அதாவது ஒரு வயதில் இருந்து நடிக்கிறேன். இப்போது 17 வயதாகிறது. இதுவரை படித்துக் கொண்டேதான் நடித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும் நல்ல மார்க் எடுத்து விட்டேன். அந்த தைரியத்தில் இப்போது பிளஸ்& 2 படித்துக் கொண்டே நடிக்கிறேன். நடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் படிப்புதான். பத்தாம் வகுப்பு போலவே பிளஸ்-2விலும் நல்ல மார்க் எடுப்பேன் என்று நம்புகிறேன். ஒரு டிகிரி வாங்கி விட வேண்டும் என்பதே எனது லட்சியம். என்கிறார் டயானா.