Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் சோனு சூட்

11 மே, 2021 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Sonu-sood-to-import-Oxygen-plant-machine

நடிகர் சோனு சூட், கொரோனா இரண்டாவது அலையிலும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். அவருக்கு பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலரும் நன்கொடை அளித்து அவரை பல உதவிகளைச் செய்ய ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.

தன்னுடைய உதவியின் அடுத்த கட்டமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து குறைந்தது நான்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்ய உள்ளாராம்.

இது குறித்து சோனு சூட் கூறுகையில், “தேவைப்படும் மக்களுக்காக ஆக்சிஜன் உற்பத்தி இயற்திரங்களைக் கொண்டு வர உள்ளோம். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் அவதிக்குள்ளாகும் மக்களை அதிகமாகப் பார்க்கிறோம்.

அவற்றைப் பெற்று, ஏற்கெனவே மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயற்திரங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கு மட்டும் ஆக்சிஜனை வழங்கவில்லை, ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பவும் செய்யும்.

முதல் உற்பத்தி இயந்திரத்திற்கு ஏற்கெனவே ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. அது இன்னும் 10, 12 நாட்களில் வந்துவிடும். இந்த நேரத்தில் காலம் தான் நமக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. அனைத்தையும் முடிந்த வரையில் குறித்த நேரத்தில் கொண்டு வர கடினமாக உழைத்து வருகிறோம். நாம் ஒரு உயிரைக் கூட இழந்துவிடக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சோசியல் மீடியாவை தெறிக்க விட்ட திவ்யா துரைசாமிசோசியல் மீடியாவை தெறிக்க விட்ட ... சூர்யா படத் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம் சூர்யா படத் தயாரிப்பாளர் கொரோனாவால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vira - tamil naadu,பிரான்ஸ்
12 மே, 2021 - 00:21 Report Abuse
vira இவர் சாதாரண மனிதர் அல்ல கடவுள் அனுப்பிய தெய்வம் தொடர்க உங்களுடைய உதவி
Rate this:
11 மே, 2021 - 21:57 Report Abuse
Suresh Arumugam Sir ji, U R the real Hero, I am impressed U sir,
Rate this:
nation first - MUMBAI,இந்தியா
11 மே, 2021 - 14:21 Report Abuse
nation first வாழ்க வளமுடன். லட்சத்தில் ஒருவர். கோடிகளில் புரளும் நமது நடிக நண்பர்கள் மிக சிறந்த திட்டத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்ப்போம். வாழ்க வளமுடன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in