Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - சார்மி

09 மே, 2021 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Never-marry-in-my-life-says-Actress-Charmi-kaur

சிலம்பரன் கதாநாயகனாக முதலில் நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அடுத்து 'காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'ஜோதி லட்சுமி' படத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'லிகர்' படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி தெலுங்கு மீடியாக்களில் பரவியது. அதற்கு சார்மி அளித்துள்ள பதிலில், “எனது வேலையில் தற்போது சிறந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவ எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றிற்கு குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே தனது பல பேட்டிகளில் தான் எப்போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர், தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்கிய கமல்ஹாசன்'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்கிய ... சினிமா பிரபலங்களின் அன்னையர் தின வாழ்த்துகள் சினிமா பிரபலங்களின் அன்னையர் தின ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SKANDH - Chennai,இந்தியா
16 மே, 2021 - 10:07 Report Abuse
SKANDH வாழ்க்கையை வித வித மாக அனுபவிக்கும் ஆசைதான்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
09 மே, 2021 - 11:57 Report Abuse
RAMAKRISHNAN NATESAN திருமணம் என்பது தப்பா? சரி அப்படியே வெச்சுக்கிட்டாலும் அதை விட பெரிய "தப்புத்தண்டா" செஞ்சிட்டா திருமணம் தப்பாவே தோணாது
Rate this:
Manian - Chennai,ஈரான்
09 மே, 2021 - 11:32 Report Abuse
Manian . அதுக்குதானே, லிவிங் டுகெதர்னு, சட்டை மாத்ர மாதி இணை மாற்றம் செய்யலாமே ஆசை 60 நாளு, மோகம் 30 நாளு ஆக 60 நாளைக்கு ஒருதரம் இணை மாற்றம்னா என்னா சொகம். அனுபஸ்தர் மமைமுக கமலு, நவீன காதலர்.
Rate this:
09 மே, 2021 - 11:20 Report Abuse
SSVA MAHALINGAM நமது நாட்டின் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இத்தகைய செய்திகளை தவிர்க்கலாம்.இப்பெண்ணுக்கு யாராவது நல்லறிவுரை கூறலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in